கோவை அருகே தூங்கிக் கொண்டிருந்த நபரை கல்லால் அடித்து கொலை – சைக்கோ இளைஞர் கைது !

X
கோவை, செல்வபுரம் அருகே கடையின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க நபரை, பேரூரை சேர்ந்த விஜய் என்ற வாலிபர் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் நடந்த இந்த தாக்குதலுக்குப் பிறகு, போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விஜயை சில மணி நேரத்தில் பிடித்தனர். விசாரணையில், 2018-ஆம் ஆண்டு கோவை சிறையில் இருந்தபோது கைதி ஒருவரையும் கல்லால் அடித்து கொன்றது தெரியவந்தது. ஜாமினில் வெளிவந்த விஜய், தற்போது மீண்டும் அதே முறையில் கொலை செய்ததால், அவர் சைக்கோ ஆசாமி என போலீசார் கூறினர். கொல்லப்பட்ட நபரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

