கோவையில் ஜல்லிக்கட்டு வீரர் சிலை திறப்பு – பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கிறது !

X
தமிழர் பாரம்பரிய வீரத்தை வெளிப்படுத்தும் வகையில், கோவை மாநகராட்சி சார்பில் காளப்பட்டி பிரதான ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு விளையாட்டு சிலை நிறுவப்பட்டுள்ளது. காளையை அடக்கும் வீரர் வடிவில் அமைக்கப்பட்ட இந்த சிலை, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ரேஸ்கோர்ஸ், சுங்கம், வடகோவை உள்ளிட்ட முக்கிய ரவுண்டானாக்களில் கல்வி, அறிவியல் மற்றும் தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வெண்கல சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. புதிய ஜல்லிக்கட்டு சிலையை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இணைந்து திறந்து வைத்தனர்.
Next Story

