சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: வியாபாரிகளிடம் எஸ்.பி., அறிவுறுத்தல்

சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: வியாபாரிகளிடம் எஸ்.பி., அறிவுறுத்தல்
X
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல்துறையினருக்கும் வியாபாரிகளுக்கும் நல்லுறவை ஏற்படுத்தி பொது மக்களுக்கு பயன்படும் வகையில் வியாபாரிகளின் நிறை குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டறிந்தார். மேலும் சிசிடிவி கேமராவை அனைத்து கடைகளிலும் முக்கிய இடங்களிலும் அதிகம் நிறுவினால் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் குற்ற செயலில் ஈடுபவர்களை எளிதில் கண்டறிய உதவும் எனவும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அலுவலக தலைமை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் வியாபாரிகள் சங்கத் தலைவர்களும், பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story