ஆணையர் திடீர் மாற்றம் : புதிய ஆணையராக பிரியங்கா மாற்றம்

X
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையராக பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு தலைமைச் செயலாளா் நா.முருகானந்தம் அரசாணை வெளியிட்டுள்ளார். இதன்படி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பானோத் ம்ருகேந்தர் லால் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசுத் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக பிரியங்கா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் 60 நாட்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழக செயல் அலுவலராக ஸ்வேதா சுமன் (ஐஏஎஸ்) நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூகநல இயக்குநரக கூடுதல் இயக்குநராக ஷரண்யா நியமிக்கப்பட்டுள்ளார். திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளராக சஜ்ஜன்சிங் ரா சவான் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில தேர்தல் ஆணைய செயலாளராக ஸ்ரீவெங்கடபிரியா நியமிக்கப்பட்டுள்ளார். பொது மற்றும் மறுவாழ்வு துறை கூடுதல் செயலாளராக பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
Next Story

