பள்ளிகளில் ஆங்கில பேச்சு திறன் வகுப்புகள் துவக்கம்

செங்கல்பட்டு மாவட்டம்,தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதற்கு,ஆங்கில பேச்சு திறன் வகுப்புகள் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி மண்டலம் - 3, வார்டு - 38 இல் உள்ள அஸ்தினாபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. இத்துடன் கல்வி சார்ந்த திட்டங்களை உள்ளடக்கிய "கற்கை நன்றே இயக்கம்" எனும் புதிய இலச்சினையும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மாநகராட்சி மேயர் த வசந்தகுமாரி கமலகண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையாளர் திரு. சீ. பாலச்சந்தர் (இஆப.), துணை மேயர் கோ. காமராஜ், துணை ஆணையாளர் திருமதி சசிகலா, மாவட்ட கல்வி அலுவலர் கு.அரவிந்தன் கல்விக்குழுத் தலைவர் சு. கற்பகம், ,கல்விக்குழு உறுப்பினர்கள் ச. ரம்யா, கா.சசிகலா, க. மஹாலக்ஷ்மி, கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story

