காங்கேயம் வாரச்சந்தையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் - கொலையா என காங்கேயம் காவல்துறை விசாரணை 

காங்கேயம் வாரச்சந்தையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் - கொலையா என காங்கேயம் காவல்துறை விசாரணை 
X
காங்கேயம் வாரசந்தையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் காங்கேயம் காவல்துறையினர் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெற்றியில் மொக்கை காயம் மற்றும் கழுத்தில் துண்டு சுற்றியிருந்தால் கொலையா? என்ற கோணத்தில் விசாரணை
காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தையானது பேருந்து நிலையம் அருகில் திருப்பூர் சாலையில் உள்ளது. சுமார் 9 ஏக்கருக்கு மேலாக இருந்த இந்த வார சந்தை காலப்போக்கில் பல்வேறு அரசு கட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையில் தற்போது ஒரு ஏக்கரில் செயல்பட்டு வருகின்றது. இங்கு திங்கட்கிழமை வாரச்சந்தையும், வியாழக்கிழமை மார்க்கெட்டும் செயல்படுவது வழக்கம். இதற்காக காங்கேயம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்து தாங்கள் கொண்டு வந்திருக்கும் காய்கறிகளை விற்பனை செய்வது உண்டு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை திங்கள், வியாழக்கிழமை சந்தைகள் முடிவடைந்த உடன் மெயின் கேட்டை பூட்டுவது வழக்கம். ஆனால் தற்போது உழவர் சந்தை மற்றும் இரண்டு நூலகங்கள் இதனுள்ளே செயல்பட்டு வருவதால் பூட்டி வைக்காமல் நிரந்தரமாக திறந்தே வைத்துள்ளனர். இதனால் மது பிரியர்களும், போதை பொருட்கள் பயன்படுத்தும் இடமாகவும் செயல்பட்டு வந்தது. மேலும் இந்த பகுதிகளில் சூதாட்டமும் நடைபெறுவது வழக்கம். சந்தையின் அருகே வே டாஸ்மாக் மதுபானக் கடை செயல்படுவதால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அங்கே மது பாட்டில்கள் வாங்கிக் கொண்டு சந்தை பகுதியை குடிகாரர்களின் கூடாரமாக திகழ்ந்து வருகிறது. மேலும் இந்த பகுதிக்கு நகராட்சி சார்பாக வாட்ச்மேன் அமைத்து கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் இதை கண்டு கொள்ளவே இல்லை. இந்த நிலையில் இன்று சந்தைப்பேட்டை வளாகத்தில் தண்ணீர் தொட்டி அருகே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக உழவர் சந்தைக்கு சென்று வந்த பொதுமக்கள் காவல் துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இவர் வடமாநில தொழிலாளியா? எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்றும்  இறந்தவருடைய சட்டை பாக்கெட்டில் வலி நிவாரண மாத்திரைகள், நெற்றியில் மொக்கை காயமும், கழுத்தில் துண்டு சுற்றப்பட்டு கிடந்ததால் ஒருவேளை கொலையாய் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடலத்தை கைப்பற்றி காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். சடலமாக கிடந்தவர் குடிபோதையில் தவறி விழுந்து இறந்து விட்டாரா அல்லது யாராவது இவரை கொலை செய்து விட்டு சென்றார்களா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story