நாமக்கல் மனவளக்கலை மன்றம் அறிவுத் திருக்கோயில் சார்பில் மனைவி நல வேட்பு நாள் விழா நாளை நடைபெறுகிறது.

நாமக்கல் மனவளக்கலை மன்றம் அறிவுத் திருக்கோயில் சார்பில் மனைவி நல வேட்பு நாள் விழா நாளை  நடைபெறுகிறது.
X
கணவன், மனைவியின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி வாழ்த்தும் ஓர் நாளாகும். இந்நாளை மனைவி நல வேட்பு நாளாக கொண்டாடி வருகின்றனர்.
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் மனைவி லோகாம்பாளின் பிறந்த நாளான ஆகஸ்டு 30-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் மனைவிக்கு மரியாதை செய்யும் நிகழ்வாக மனைவி நல வேட்பு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. கணவன், மனைவியின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி வாழ்த்தும் ஓர் நாளாகும். இந்நாளை மனைவி நல வேட்பு நாளாக கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகில் அறிவுத் திருக்கோயிலில்( மனவளக்கலை மன்றம்) மனைவி நல வேட்பு நாள் விழா நாளை சனிக்கிழமை ஆகஸ்ட் 30-ஆம் தேதி மாலை 5 மணி முதல் 8.00 மணி வரை நடைபெறுகிறது.
உலக சமுதாய சேவை சங்கம்- நாமக்கல் அறிவு திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவரும் கல்வியாளருமான அருள்நிதி.மு.ஆ.உதயகுமார் தம்பதியினர் தலைமை தாங்குகிறார்கள்.ஆழியாறு சேலம் மண்டல தலைவர் / உலக சேவா சமுதாய சங்க துணை தலைவர் உழவன் தங்கவேலு சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர் தம்பதியர்களாக சரஸ்வதி - கருணாநிதி (மாவட்ட நீதியரசர் பணிநிறைவு, நாமக்கல்), உமா மகேஸ்வரி - முனைவர் செல்வராஜ் (முதல்வர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ கல்லூரி, நாமக்கல்), நந்திதா - அருளரசு (இணைப்பதிவாளர், கூட்டுறவு துறை, நாமக்கல்), ஜீவிதா - உதயக்குமார் ( சேர்மன், ஸ்பைரோ,சிபிஎஸ்இ இன்டர்நேஷனல் ஸ்கூல், நாமக்கல்) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.இவ்விழாவில் தீட்சைப் பெற்றவர்கள், புதிய அன்பர்கள் தம்பதியினராக வந்து பங்கேற்கலாம் கட்டணம் எதுவும் கிடையாது.
Next Story