முகமூடி அணிந்து பணத்தை திருடிய மர்ம நபர் - சிசிடிவி வைரல்

முகமூடி அணிந்து பணத்தை திருடிய மர்ம நபர் - சிசிடிவி வைரல்
X
கொடைக்கானல் பெருமாள்மலை பலசரக்கு கடையில் முகமூடி அணிந்து பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருபவர் சுல்தான், இவர் பல ஆண்டுகளாக பலசரக்கு வியாபாரம் செய்து வருகிறார் .தினசரி நடைபெறும் வியாபாரத்தின் பணத்தினை கடையில் உள்ள பீரோவில் வைத்து செல்வது வழக்கம். இதனை மர்மநபர் பல நாட்களாக நோட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இரவு கடையை பூட்டிவிட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார் மீண்டும் வழக்கமாக அதிகாலையில் முகமூடி அணிந்த நபர் கடையில் உள்ள பூட்டை உடைத்து கடையின் பீரோவில் வைத்திருந்த மூன்றரை லட்சத்தை திருடியது தெரிய வந்துள்ளது .இது குறித்து பலசரக்கு கடையின் உரிமையாளர் சுல்தான் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் . இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை சோதனையிட்டனர் அதில் உள்ள சிசிடிவியில் மர்மநபர் பணம் திருடி செல்லும் பதிவு காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடைக்கானலில் சமீப காலமாக பைக் திருட்டு , கடைகள் உடைக்கப்பட்டு பணம் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் பொது மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே கொடைக்கானல் காவல் துறையினர் திருட்டில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story