தொழிலாளியிடம் அரிவாளைக்காட்டி மிரட்டல் விடுத்த ரவுடி கைது

தொழிலாளியிடம் அரிவாளைக்காட்டி மிரட்டல் விடுத்த ரவுடி கைது
X
தூத்துக்குடி மீன் மார்க்கெட்டில் கட்டிடத் தொழிலாளியிடம் அரிவாளைக்காட்டி மிரட்டல் விடுத்த ரவுடி கைது
தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி காசிராஜன் (48) இவர் பூபாலராயபுரத்தில் உள்ள மீன் மார்க்கெட் வழியாக நடந்து வரும் போது அவரை வழிமறித்த மட்டக்கடை புதுத்தெருவைச் சேர்ந்த ரவுடி லூக்காஸ் கிங்ஸ்லி (27) அரிவாளைக்காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வடபாகம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து லூக்காஸ் கிங்ஸ்லியை கைது செய்து, அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட ரவுடி லூக்காஸ் கிங்ஸ்லி மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story