வனத்துறையினர் பொது மக்களிடையே வாக்குவாதம்

வனத்துறையினர் பொது மக்களிடையே வாக்குவாதம்
X
அய்யலூர் அருகே மலை வழி பாதை பயன்படுத்தக் கூடாது வனத்துறையினர் பொது மக்களிடையே வாக்குவாதம்
திண்டுக்கல் அய்யலூர் அருகே மலைப்பகுதியான பஞ்சம்தாங்கி கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு அருகிலேயே தோட்டம் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில் விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக பல ஆண்டு காலமாக மலைவழிப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது விவசாய நிலங்களுக்குச் செல்ல முடியாமல் வனத்துறையினர் ஜேசிபி மூலம் பாதையை பள்ளம் தோண்டி யாரும் செல்ல முடியாத வண்ணம் ஆழமான குழியை தோண்டி வைத்தனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த ஒரு சில குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் விவசாய நிலங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் இதே போன்று கடந்த பல மாதங்களுக்கு முன்பு இச்சித்திபட்டி என்ற கிராமத்தில் வனப்பகுதியில் உள்ள கிராமப்புறத்தை சேர்ந்த பொதுமக்கள் கூடி நீர் இன்றி அவதிப்பட்ட பொழுது பேரூராட்சி சார்பில் வனப்பகுதியின் அருகில் போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் எடுத்த பொழுது வனத்துறையினர். தடுத்து நிறுத்தினர் இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி சுனையில் வரும் குடிநீரை பருகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வனத்துறையினர் அவ்வப்போது பொதுமக்களை இடையூறு ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு செய்வதால் பொதுமக்களுக்கும் வனத்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது அது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Next Story