கொரவப்பட்டி-அருள்மிகு ஸ்ரீ அரச மரத்தையன் சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா.

கொரவப்பட்டி-அருள்மிகு ஸ்ரீ அரச மரத்தையன் சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா.
கொரவப்பட்டி-அருள்மிகு ஸ்ரீ அரச மரத்தையன் சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம் மூக்கணாங்குறிச்சி கிராமத்தில் உள்ள குறவப்பட்டி அருள்மிகு ஸ்ரீ அரசமரத்து ஐயன் சுவாமி மற்றும் கருப்பு ஸ்ரீ கருப்பண்ணசாமி ஆலயம் புதுப்பிக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோவில் யாக குண்டத்தில் யோசித்த புனித நீரை கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு சிறப்பாக நடத்தினர். இந்த விழாவில் பங்கேற்ற தமிழக நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் வாழவந்தி சரவணன்,புதிய திராவிட கழக நிறுவன தலைவர் ராஜ்கவுண்டர் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.அவர்களுக்கு கோவில் சார்பாக மலர்மாலை மற்றும் சால்வைகள் அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் கோவில் சார்பாக வழங்கினார்.கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்த அன்பரசன் ஏற்பாடு செய்திருந்தார்.
Next Story