வள்ளியப்பம்பாளையம் ஸ்ரீ நல்லாயி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

.வள்ளியப்பம்பாளையம் ஸ்ரீ நல்லாயி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
வள்ளியப்பம்பாளையம் ஸ்ரீ நல்லாயி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா வள்ளியப்பம் பாளையத்தில் ஸ்ரீ ரத்தின விநாயகர் ஸ்ரீ ஐயர் ஸ்ரீ தன்னாசி ஸ்ரீ ராஜ கோபுர ஆலயத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ நல்லாயி அம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கலசத்தில் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் கோ பூஜையும் அதனை தொடர்ந்து மகா தீபாதாரணையும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் சார்பில் அன்னதானம் வழங்கினர்.
Next Story