மாரவாடியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

தர்மபுரி ஒன்றியம் மாரவாடியில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
தர்மபுரி ஒன்றியம் மாரவாடி பகுதியில் கோட்டாட்சியர் காயத்ரி தலைமையில் சிறப்பு முகாமை இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். தர்மபுரி தாசில்தார் சவுக்கத் அலி முன்னிலை வகித்தார். இம்முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர் இதில் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப உறுப்பினர் அட்டை, ஆதார் திருத்தம், இலவச வீடு, உள்ளிட்ட கோரிக்கைகள் வேண்டி 470 க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த முகாமில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story