கரூரில் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பெண்கள் முளைப்பாரி உடன் பங்கேற்பு.

கரூரில் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பெண்கள் முளைப்பாரி உடன் பங்கேற்பு.
கரூரில் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பெண்கள் முளைப்பாரி உடன் பங்கேற்பு. தமிழகம் எங்கும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல கரூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் கரூர் நகர பகுதியில் நேற்று இரவு விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தை இந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் பழனி பாலன் காவி கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேளதாளங்களுடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் இந்து முன்னணி தொண்டர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி பரவசம் ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி மாவட்ட பொருளாளர் ரமேஷ் குமார் மாநகர தலைவர் ஜெயம் கணேஷ்.முன்னாள் எம்எல்ஏ வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் இறுதியாக காவிரி ஆற்றில் சென்று விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
Next Story