தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு

தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு
X
குமாரபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சம்பளம் வழங்கப்படவில்லை என, பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
குமாரபாளையம் நகராட்சி 33 வார்டுகளை கொண்ட ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு பரப்பில் அமைந்துள்ள நகராட்சி பகுதியாகும். குமாரபாளையம் நகராட்சியில் சுமார் 32 ஆயிரம் குடியிருப்புகள் உள்ள நிலையில், இந்த நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரப் பிரித்து, வீடு வீடாகப் பெற, சென்னையைச் சேர்ந்த நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டுள்ளது இந்த நிறுவனம் சுமார் 90 தூய்மை பணியாளர்களை கொண்டு தூய்மைப் பணிகளை செய்து வந்தனர். சில மாதங்களாக தனியார் நிறுவனம் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத் தொகையை மாதம் தோறும் வழங்காமல், காலம் தாழ்த்தி வருவதால், தூய்மை பணியாளர்கள் தங்கள் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமலும், வீட்டு வாடகை கூட செலுத்த முடியாமலும் தவித்து வருகின்றனர் இது குறித்து பலமுறை நிர்வாகத்திடம் முறையிட்டும், நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நேற்று தூய்மை பணியாளர்கள் தாங்கள் பணிக்குச் செல்லாமல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குப்பைகள் தேங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட பொழுது, குமாரபாளையம் நகராட்சியில் கடந்த எட்டு மாதங்களாக ஆணையாளர் மற்றும் நகராட்சி பொறியாளர் ஆகியோர் பணியிடம் காலியாக இருந்தது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தான் நகராட்சி ஆணையாளர் ரமேஷ் என்பவர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து நேரடியாக நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளார். நகராட்சி பணிகள் குறித்து ஆணையாளர், பணியாளர்களிடம் கலந்து பேசுவதற்கு கூட காலதாமதம் தராமல், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தூய்மை பணியாளர்கள் பணி தொடர அறிவுறுத்தப்படுவார்கள் அவர்களுக்கு சேர வேண்டிய நிலுவை சம்பளத் தொகையை முழுமையாக வழங்க ஆவண செய்வதாகவும் கூறினர்
Next Story