சிறுகாவேரியில் சகதியான சாலை வாகன ஓட்டிகள் அவதி

X
காஞ்சிபுரம் ஒன்றி யம், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சியில் உள்ள பச்சையம்மன் கோவில் பின்பக்கம் குறிஞ்சி நகர் உள்ளது. புத்தேரி ஊராட்சி மேட்டு நகரில் இருந்து, விநாயகபுரம், பச்சையம்மன் கோவில், பத்மாவதி நகர் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் குறிஞ்சி நகர் வழியாக சென்று வருகின்றனர். இருப்பினும் குறிஞ்சி நகர் பிரதான சாலை, மண் சாலையாக இருப்பதால், லேசான மழைக்கே சகதியான சாலையாக மாறிவிடுகிறது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள குறிஞ்சி நகரில், மண் சாலைக்கு, தார் சாலை அமைக்க சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து ள்ளது.
Next Story

