எச்.ஐ.வி எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

நாமக்கல் மாநகராட்சி, குளக்கரைசாலையில் மாவட்ட ஆட்சியர் திருமதி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் - 2025 ஐ தொடங்கி வைத்தார்.
சமூகத்தின் அனைத்து பிரிவினிடையே எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முதன்மை கவனம் செலுத்தி தீவிரபடுத்தப்பட்ட பிரசாரம் 2025-ஐ தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் வகுத்துள்ளது. அதன்படி ஆகஸ்டு- 12 சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு ஆகஸ்டு -12 முதல் அக்டோபர்-12 வரை 60 நாட்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்து தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தினை செயல்படுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. மேலும், எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் கிராமிய கலைநிகழ்சிகள் வாயிலாக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, மக்கள் அதிகம் கூடுகின்ற பகுதிகளில் கல்லுரி மாணவ / மாணவியர்கள் பங்குபெறும் Flash mob, மக்கள் பயன்படுத்தும் பயணியர் ஆட்டோக்களில் விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டுதல் மற்றும் விழிப்புணர்வு மனிதசங்கிலி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. அதன்படி, இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் நாமக்கல் மாநகராட்சியில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் - 2025 மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து கலந்து கொண்டார். தொடர்ந்து, பயணியர் ஆட்டோக்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட ஒட்டுவில்லைகளை ஒட்டினார். பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் அமைக்கப்பட்ட அரங்கத்தினை திறந்து வைத்தார்.தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் நாமக்கல் மாநகராட்சி, கைலாஷ் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனுக்கள் பெறுவதை பாரவையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.கே.சாந்தா அருள்மொழி, மாவட்ட நல அலுவலர் மரு.க.பூங்கொடி உட்பட நர்சிங் கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story