கல்லுமடை டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம்.

கல்லுமடை டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம்.
கல்லுமடை டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் மணவாடி அருகே மருதம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் வீரபாண்டி வயது 26 அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வயது 27. இருவரும் புதன்கிழமை அன்று இரவு 9 மணி அளவில் செல்லாண்டிபட்டி - மண்டல பட்டி சாலையில் டூவீலரில் சென்றனர் . இவர்களது வாகனம் கல்லுமடை அருகே வந்த போது டூவீலரை வேகமாக இயக்கியதால் தனது பிடி தளர்ந்து கீழே விழுந்தார் மணிகண்டன். இதில் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அறிந்த மணிகண்டனின் உறவினர் நல்ல தம்பி அளித்த புகாரில் டூவீலரை வேகமாக இயக்கிய வீரபாண்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story