உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் சிறப்பாக நடத்திய அதிகாரிகளுக்கு நகர மன்ற தலைவர் பாராட்டு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் சிறப்பாக நடத்திய அதிகாரிகளுக்கு நகர மன்ற தலைவர் பாராட்டு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர் மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த்,நகர்மன்றத் துணைத் தலைவர் கார்த்திகேயன் நகராட்சி பொறியாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருக்குறள் வாசித்து கூட்டத்தை தொடங்கிய நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நகர மன்ற தலைவரின் சிறப்பு தீர்மானம் வாசித்தார். அதில் பொது மக்களின் குறைகளை நேரடியாக தீர்த்து வைக்க உங்களுடன் ஸ்டாலின் முகாம் அமைத்துக் கொடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது திருச்செங்கோடு நகர மன்ற பகுதிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் பொதுமக்கள் நீண்ட நாளாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகள் உள்ளிட்ட 15 துறை கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம் என அறிவிக்கப்பட்டு இந்த முகாம் 11 கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு தற்போது ஆறு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன இந்த முகாமில் நகராட்சி தொடர்பான சொத்துவரி குடிநீர் கட்டண பெயர் மாற்றம் உள்ளிட்ட 148 மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டு 100% உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெருவிளக்கு சாக்கடை வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 59 மனுக்கள் மீது அரசின் வழிகாட்டுதல்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தெரிவித்தார். இதற்கு உறுதுணையாக இருந்த நகராட்சி ஆணையாளர் நகராட்சி பணியாளர்கள் மற்றும் வேறு துறை ஊழியர்கள் அனைவருக்கும் நகர மன்றத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். இந்த கூட்டத்தில் 58 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.தீர்மானங்களின் மீது பேசியநகர் மன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கூறியதாவது. ஒன்றாவது வார்டு திமுக உறுப்பினர் மாதேஸ்வரன்முகாம்களில் கொடுக்கப்பட்ட 59 சாக்கடை வசதி சாலை வசதி கூறும் மலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தீர்கள் இதை ஏற்கனவே இதற்கு முன்புதங்களிடமும் நகராட்சி ஆணையாளரிடமும் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எங்களது வார்டு பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது வேறு பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள நாய்களும் இங்கு விடப்படுகிறது.இதனால் நாய் தொல்லை அதிகமாக உள்ளது.எங்களது வார்டு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட எந்த கட்டிடங்களிலும் திறப்பு விழா குறித்த கல்வெட்டுகள் வைக்கப்படவில்லை. நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு முன்பு கொடுத்த அனைத்து கோரிக்கைகளுக்கும் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது விரைவில் தீர்வு காணப்படும். நகராட்சி துப்புரவு அலுவலர் சோழ ராஜ்: நகராட்சியில் நாய் தொல்லை அதிகமாக இருப்பதாக வந்த புகாரை எடுத்து அரசின் உத்தரவுப்படி இருநூறு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை ஊசி செலுத்தப்பட்டுஎந்தெந்த வார்டு பகுதிகளில் தான் விடப்படுகிறது இதற்கான புகைப்பட ஆதாரங்கள் நகராட்சியில் உள்ளது.நாய்களுக்கு உணவு கொடுப்பவர்கள்இந்தப் பகுதியில் அதிகமாக உள்ளார்களோ தெருநாய்கள் என்பதால் உணவு தேடியும் உணவு கிடைக்கும் இடம் தேடியும் வந்து விடுகின்றன.முதல் கட்டமாக 200 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது இரண்டாவது கட்டமாகஅறுவை சிகிச்சை செய்யப்படும் போது எந்தெந்த பகுதிகளில் நாய் தொல்லை அதிகமாக உள்ளதோ அந்த பகுதிகள் கண்டறியப்பட்டு தீர்வு காணப்படும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு புதிய கட்டிடங்களில்குறித்த கல்வெட்டுகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டாவது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் இதேபோல் எனது வார்தான சண்முகபுரம் மற்றும் செங்கோடம்பாளையம் பள்ளி அருகில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கொசு புகை அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தெற்கு தோட்டம் பகுதியில் உறிஞ்சி வாகனம் மூலம் கழிவுநீர் அகற்றப்பட்டாலும் நிரந்தர தீர்வு வேண்டுமென கடந்த ஒன்றை வருடங்களாக கோரிக்கை அனுப்பி வருகிறேன் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்க வேண்டும்.பத்து தெரு விளக்குகள் அமைத்து தருவதாக கூறினீர்கள் இதுவரை அமைக்கப்படவில்லை நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் எஸ் டி பி ஐதிட்டத்தில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது அதில் உள்ள சில பிரச்சனைகள் காரணமாக நிரந்தர தீர்வு காண்பதில் சில சிக்கல்கள் உள்ளது உங்கள் பகுதிக்கு தற்காலிகமாக தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி பொறியாளர் சரவணன் தெரு விளக்குகள் குறித்து திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது உரிய உத்தரவு வந்தவுடன் அமைத்து தரப்படும். 32 வது வார்டு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர் அசோக்குமார் எங்களது வார்டு பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படவில்லை இரண்டு தொட்டிகள் உள்ளது அதனை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அன்னை சத்யா நகர் அருகே சாலை விரிவாக்க பணியின் போது நான்கு அடி உயரத்திற்கு உயர்த்தி விட்டதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர் இது நெடுஞ்சாலைத்துறை சார்ந்தது என்றாலும் நகராட்சி சார்பில் நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் வைத்து அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்ய ஆய்வு மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் எப்போது சுத்தம் செய்யப்பட்டது அடுத்தது எப்போது சுத்தம் செய்யப்படும் என விபர குறிப்போம் மேல்நிலைத் நீர் தேக்க தொட்டி அருகே வைக்கப்படும். நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் சாலைஉயரம் குறித்துநகர் மன்ற உறுப்பினர் தனது கடிதம் ஒன்றையும் பொது மக்களிடம் பெறப்பட்ட மனு ஒன்றையும்நாளை நடக்க உள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்கொடுத்தால் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் நாலாவது வார்டு திமுக உறுப்பினர் டிஎன் ரமேஷ் எங்களது பகுதியில் 30 ஆயிரம் லிட்டர்தண்ணீர் தொட்டி உள்ளது அது பழுதடைந்த நிலையில் உள்ளது அதனை மாற்றி 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் டேங்க் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் 13 வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் சினேகா ஹரிகரன் எனது வார்டில் குமரன் கல்வி நிலையம் அருகே உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டது வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட அனைத்து விளக்குகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்ட நிலையில் எனது வார்டு பகுதியில் அமைக்கப்பட்ட மின்விளக்கு இதுவரை மின் இணைப்பு தரப்படவில்லை.எனது வார்டு பகுதியில் ஒன்பது தெருக்கள் உள்ளதுஒன்றில் கூட பெயர் பலகை வைக்கப்படவில்லை இதனால் பொதுமக்களோ, தபால் கொடுக்க வருபவர்களோ இடம் தெரியாமல் தடுமாறும் நிலை உள்ளதுஎட்டிமடை செல்லும் வழியில் உள்ள பெயர் பலகையில் சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அவ்வாறு ஒட்டப்பட்டுள்ள தியேட்டர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு உறுபினரின் கோரிக்கையை கவனத்தில் கொண்டுபெயர் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நகராட்சி பொறியாளர் சரவணன் விரைவில் வழிகாட்டுதல் பலகை அமைக்கப்படும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் பலகையில் போஸ்டர் ஒட்டிய திரையரங்குக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் ஒன்றாவது வார்டு திமுக உறுப்பினர் மாதேஸ்வரன் உப்பு நீருக்காக அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் டேங்க் சுத்தம் செய்யப்படுவதில்லை இதனால் உப்புக்கட்டி தண்ணீர் வருவது தடை படுகிறது தூய்மை இல்லாத தண்ணீர் வருகிறது நகராட்சி பொறியாளர் சரவணன் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து டேங்குகளையும் சுத்தம் செய்யப்படும். நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உப்பு நீர் டேங்குகளைசுத்தம் செய்ய தனி குழு அமைத்து அனைத்து டேங்குகளும் ஒரு மாத காலத்திற்குள்சுத்தம் செய்யப்படும் இருபதாவது வார்டு திமுக உறுப்பினர் சண்முக வடிவு எனது வார்டு பகுதியில் ஆற்று நீர் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது பிட்டர்கள் தண்ணீர் திறந்து விடுபவர்கள் சரியான முறையில் தண்ணீர் திறந்து விடுவதில்லை.சாலைகளில் புல் முளைத்துள்ளது அதை சுத்தம் செய்ய ஜேசிபி எந்திரத்தை அனுப்பி வைக்க வேண்டும் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு நல்ல தண்ணீர் வழங்குவதில் பாரபட்சம் காட்டும் ஃபிட்டர்கள் தண்ணீர் திறந்து விடுவார்கள் யாராக இருந்தாலும் பொறியாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜேசிபி எந்திரம் அனுப்பி சாலையோரம் முளைத்துள்ள பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்என கேட்டுக்கொள்கிறேன். முப்பதாவது வார்டு திமுகநகர் மன்ற உறுப்பினர் செல்லம்மாள் தேவராஜன் கொல்லப்பட்டியில் இரண்டு பள்ளிக்கூட கட்டிடங்கள் ஒரு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது அங்கு திறப்பு விழா குறித்த எந்த கல்வெட்டுகளும் வைக்கப்படவில்லை ஹவுசிங் போர்டு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன் உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து பள்ளிக்கூடத்திற்கு ஒரு உப்பு நீர் குழாய் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு திறப்பு விழா கல்வெட்டு வைக்கவும்,ஆழ்துளை கிணறு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் நகர் மன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் உள்ள காலியிடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்தபட்சம் ஐந்துமரக்கன்றுகளை நடவடிக்கை எடுக்க வேண்டும் நகர்மன்ற தலைவரை அழைத்தோ என்னை அழைத்து அதை ஒரு சிறு விழாவாக நடத்தி சமூக காடுகள் வளர்க்கும் திட்டத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் அதன்படி அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் நாளையிலிருந்து இந்த பணி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறினார். தெரு நாய்கள் பிரச்சனை குறித்தும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வது குறித்தும் சாக்கடை வசதி அமைத்து தரவேண்டும் என்பது குறித்தும் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தெரிவித்தார்.
Next Story