ஓசூர் அருகே சாலை ஓரத்தில் கொட்டி இருந்த குப்பை குவியலில் திடீர் தீ.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அருகே உள்ள ஜூஜூ வாடி சோதனைச்சாவடி அருகில் ஒசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே சர்வீஸ் சாலை ஒட்டியவாறு குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த குப்பையில் நேற்று திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. மேலும் அந்த பகுத முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள மிகவும் அவதியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Next Story

