கோவை: வடவள்ளி பகுதியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் !

கோவை: வடவள்ளி பகுதியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் !
X
மருத்துவ பரிசோதனை முகாம்: கோவை மக்களுக்கு அரிய வாய்ப்பு.
கோவை மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, கோவை மாநகராட்சி வடவள்ளி மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) முகாம் நடைபெற உள்ளது. மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறியியல், மகளிர், குழந்தை, இதயவியல், நரம்பியல் உள்ளிட்ட பிரிவுகள் இடம்பெறுகின்றன. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி மாவட்ட கலெக்டர் பவன்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
Next Story