சங்கரன்கோவிலில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது

சங்கரன்கோவிலில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது
X
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சங்கரன்கோவில் நகரில் உள்ள கோமதியாபுரம் தெருக்கள், லட்சுமியாபுரம் தெருக்கள், புதுமனை தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 25 விநாயகர் சிலைகளும், சங்கர நாராயணசாமி கோவில் முன்பு கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை கோவில் முன்பு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இந்த விநாயகர் சிலையை ஊர்வலமாக சென்று சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ஆவுடை பொய்கை தெப்பக்குளத்தில் வைத்து விநாயகர் சிலைகளை கரைத்து சென்றனர் . இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
Next Story