எம்எல்ஏ தலைமையில் கோவில் கும்பாபிஷேக விழா
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் சோம்பட்டி கிராமம் கீழூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஊர் மாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பொன் மாரியம்மன், நவகிரகம் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசியாக நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சியில் இன்று வெள்ளிக்கிழமை தர்மபுரி சட்டமன்ற உறுப்பினரும் பாமக மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ்பி வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார் இதனை அடுத்து நிர்வாகம் சார்பில் அவருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story






