ராசிபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் திருக்கோவில் கும்பாபிஷேக விழா.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுரம் தரிசனம்..

X
Rasipuram King 24x7 |29 Aug 2025 6:55 PM ISTராசிபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் திருக்கோவில் கும்பாபிஷேக விழா.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுரம் தரிசனம் செய்தனர்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் அருள்மிகு அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோவிலானது அமைந்துள்ளது. இக்கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழாவானது நடைபெற்றது.முன்னதாக கடந்த ஆடி மாதம் 23ஆம் தேதி முகூர்த்த கால் நடப்பட்டு, தொடர்ந்து பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அருள்மிகு ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோவில் கோபுரத்திற்கு சிவச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புனித நீரை கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேக விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபர தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்களுக்கு விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது...
Next Story
