போளூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பட்டிமன்றம்.

X
போளூர் டவுன் பகுதியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை விமர்சையாக கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக போளூர் வட்டாட்சியர் அலுவலக அருகே ஸ்ரீ காவல் நீதி விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெற்றது. சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு யாகங்கள் பூஜைகள் நடைபெற்ற நிலையில் தீபாரதனை காண்பிக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில் அதனைத் தொடர்ந்து நாளை 30.08.2025 சனிக்கிழமை அன்று சிரிப்பும் சிந்தனையும் கலந்த மாபெரும் இன்னிசை பட்டிமன்றம் நடைபெற உள்ளது பட்டிமன்றத்திற்கு புலவர் சீனி சம்பத் நடுவராக உள்ளார் மேலும் சௌந்தர பாண்டியன், பேராசிரியை கவுசல்யா, அரியலூர் பவித்ரா, கோ.சதாசிவம், சேலம் ஐஸ்வர்யா, முனைவர் வேதநாயகி உள்ளிட்டோர் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தருவதற்கு திருமணத்திற்கு முன்பா திருமணத்திற்கு பின்பா என்ற தலைப்பின் கீழ் பேச உள்ளனர். பட்டிமன்றத்திற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story

