ஜெயங்கொண்டத்தில் ஆசிரியர் தின விழாவை ஒட்டி பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது வழங்க ஏற்பாடு.

X
அரியலூர் ஆக.29- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோரியம்பட்டி டி எம் டி திருமண மண்டபத்தில் பன்னாட்டு லயன் சங்கம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது வழங்கும் விழா செப்டம்பர் 6ஆம் தேதி லயன் சங்க மாவட்டத் தலைவரும், பி.ஜி.ஆர் நகை மாளிகை உரிமையாளருமான ரமேஷ்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் மாவட்ட நிர்வாக அலுவலரும் கே.ஆர்.டி டிவிஎஸ் உரிமையாளரும், திருச்சி சரக உதவி தளபதியுமான கே.ராஜன் வரவேற்புரையாற்ற, லயன்ஸ் மாவட்ட ஆளுநர் மணிவண்ணன் துவக்கயுரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் சிறப்பு விருந்தினராகவும், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பொ.ரத்தினசாமி, பன்னாட்டு இயக்குனர் சீனிவாசன், ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணன், மாவட்ட நெறியாளர் முகமது ரஃபி கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது வழங்க உள்ளனர். லயன் சங்க மாவட்ட தலைவரும், ஆர்.கே.எஸ் பசு நெய் உரிமையாளரும், இயற்கை வேளாண் விஞ்ஞானியுமான ஆர்.கே.செல்வமணி, அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளரும், பரபிரம்மம் பவுண்டேசன் நிறுவனத் தலைவருமான முத்துக்குமார், ஜெயங்கொண்டம் லயன் சங்க தலைவர் கருப்பையா, செயலாளர் முருகானந்தம், பொருளாளர் சதாசிவம் உள்ளிட்ட கரூர் முதல் காரைக்கால் வரை உள்ள அனைத்து லயன் சங்கமும், மாவட்டத்தில் உள்ள அனைத்து லயன் சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொள்கின்றனர். அறிவுச்சுடர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக கரூர் முதல் காரைக்கால் வரை லயன்ஸ் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு லயன் சங்கமும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களை தேர்வு செய்து ஒரு சங்கத்திற்கு ஒரு ஆசிரியர் என 286 சங்கத்தில் இருந்து 286 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அறிவுச்சுடர் விருது வழங்கி சிறப்பிக்க உள்ளனர் விழாவிற்கான ஏற்பாடுகளை லயன் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்
Next Story

