தாராபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்

X
விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து மக்கள் கட்சி சார்பில் 33 விநாயகர் சிலைகளும், விசுவ இந்து பரிஷத் சார்பில் 11 சிலைகளும் தாராபுரத்தில் நேற்று முன்தினம் பிர திஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகளுக்கு 2 நாட்களாக பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. அனைத்து சிலைகளும், தாராபுரத்தில் உள்ள பொள்ளாச்சி சாலை ரவுண்டானாவுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் பா.ஜனதா மாநில ஓ.பி.சி.அணியின் பொதுக்குழு உறுப்பினர் கொங்கு ரமேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்துெகாண்டனர். தாரை தப்பட்டையுடன் ஊர்வலம் தொடங்கி, பூக்கடைக் கார்னர், என்.என்.பேட்டை வீதி, ஐந்து சாலை சந்திப்பு வழியாக ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள அமராவதி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்தையொட்டி, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரோஜந்திரன், தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் விஜயசாரதி, சரவணன், சஜினி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story

