போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

X
Komarapalayam King 24x7 |29 Aug 2025 7:31 PM ISTகுமராபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
. குமராபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு மன்றம் சார்பாக போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமை வகித்தார். குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கல்லூரியில் நிறைவு பெற்றது. போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்து, பதாதைகள் கைகளில் ஏந்தியவாறும், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தவாறும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பேராசிரியர்கள் ரகுபதி, ஞானதீபன் உள்பட பலரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போதைப் பொருள் தடுப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் குமார் செய்திருந்தார்.
Next Story
