சூளகிரி அருகே பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது.

X
கிருஷ்ணகிரி மவட்டம் சூளகிரி அடுத்துள்ள காளிங்காவரம் பகுதியை சேர்ந்தவர் சுகுணா(25) இதே பகுதியை சேர்ந்தவர் திம்மராஜ்(28) கூலித்தொழிலாளியான. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில் குடிபோதையில் அடிக்கடி சுகுணாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி அன்று சுகுணா வீட்டின் அருகே குடிபோதையில் நின்ற அவர், சுகுணாவை ஆபாசமாக பேசியுள்ளார். இதை தட்டி கேட்ட அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த சுகுணா சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார், திம்மராஜை கைது செயதுவிசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

