நாட்டு நலப்பணித்திட்ட மாநில அளவிலான முகாம்

X
தமிழ்நாடு மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு வளர்ச்சித்துறை, மாநில நாட்டு நலப்பணித்திட்ட இயக்ககம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் நாகர்கோவில் தெ.தி. இந்துக்கல்லுரி நாட்டு நலப்பணித்திட்ட அலகுகளும் இணைந்து மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சி பட்டறை இந்து கல்லூரியில் நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெளியப்பன், தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் குணநிதி, தெ.தி. இந்துக் கல்லூரி தலைவர் செயலாளர் முனைவர் நாகராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

