ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக பேருந்து சேவையினை துவக்கி வைத்து கல்லூரி மாணவ மாணவியர்களுடன் பேருந்தில் பயணித்து சிறப்பித்தார்.

X
ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமத்தினை சார்ந்த கல்லூரி மாணவ மாணவியர்கள் அரசு கல்லூரிக்கு நேரடியாக பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி நீண்ட நாட்களாக கோரிக்கையினை முன்வைத்த நிலையில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக பேருந்து சேவையினை துவக்கி வைத்து கல்லூரி மாணவ மாணவியர்களுடன் பேருந்தில் பயணித்து சிறப்பித்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட வன்னியம்பட்டி கிராமம் அருகே தமிழ்நாடு அரசு அறிவியல் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரில் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இனாம் கோவில்பட்டியில் இருந்து புத்தூர் முகவூர் தளவாய்புரம் புணல்வேலி என சுமார் 10 இருக்கும் மேற்பட்ட கிராமத்தினைச் சார்ந்த கல்லூரி மாணவ மாணவியர்கள் இரண்டு மற்றும் மூன்று பேருந்துகள் ஏறி இறங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர். மேலும் இனாம் கோவில்பட்டியில் இருந்து நேரடியாக அரசு கல்லூரி வரை சிறப்பு பேருந்து இயக்க கோரி தமிழக அரசுக்கும் தமிழ்நாடு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரிடமும் கிராம பொதுமக்களும் கல்லூரி மாணவ மாணவியரும் நீண்ட நாட்களாக கோரிக்கையினை முன் வைத்த நிலையில் . கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் தங்கபாண்டியன் தலைமையில் மாணவ மாணவியர்கள் ஒரே பேருந்தில் கல்லூரி சென்று வரும் வகையில் சிறப்பு பேருந்து இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது. இன்று பேருந்து சேவை துவக்கப்பட்டதனை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் கொடியை அசைத்து துவக்கி வைத்து கல்லூரி மாணவ மாணவர்களுடன் பேருந்தில் பயணம் செய்து சிறப்பித்தார். இப்பேருந்து இயக்கத்தின் மூலம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சார்ந்த கல்லூரி மாணவ மாணவியர்கள் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

