பெரியாரியம் உலகத்தவர் அனைவருக்குமானது - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

பெரியாரியம் உலகத்தவர் அனைவருக்குமானது - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
X
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் உருவப்படம் திறக்கப்படவுள்ளது குறித்து, ‘பெரியாரியம் உலகத்தவர் அனைவருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “உலகமயமாகிறார் பெரியார். "ஆதிக்கம்தான் என் எதிரி" என முழங்கிச் சாதியாலும் பாலினத்தாலும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகச் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்த தந்தை பெரியார் உலகம் முழுமைக்குமானவர். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டினையொட்டி உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4 அன்று நடைபெறும் கருத்தரங்கினில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் உருவப்படத்தினைத் திறந்து வைத்து, தென்னக மயக்கம் தீர்த்த சுயமரியாதை இயக்கம் குறித்த இரு நூல்களையும் பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; பெரியாரியம் உலகத்தவர் அனைவருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
Next Story