ஆலம்பட்டி சுகாதார நிலையத்தில் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் திடீர் ஆய்வு!

ஆலம்பட்டி சுகாதார நிலையத்தில் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் திடீர் ஆய்வு!
X
மருத்துவர்களிடம் நோயாளிகளை காக்க வைக்காமல் உடனுக்குடன் உடல் நலத்தை பரிசோதனை செய்து அனுப்புமாறும், அவர்களிடம் இன்முகத்துடன் பேச வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
மோகனூர் ஒன்றியம் ஆண்டாபுரம் பகுதியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி சென்று விட்டு திரும்பும் பொழுது ஆலம்பட்டி சுகாதார நிலையத்தினை "திடீர்" ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியில் இருந்த செவிலியர்களிடம் நோயாளிகளின் எண்ணிக்கை குறித்தும், மருத்துவர்களிடம் நோயாளிகளை காக்க வைக்காமல் உடனுக்குடன் உடல் நலத்தை பரிசோதனை செய்து அனுப்புமாறும், அவர்களிடம் இன்முகத்துடன் பேச வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். மேலும் ஆண்டாபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மதிய உணவு திட்டத்தினை ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளரும் திசா கமிட்டி உறுப்பினருமான ரவிச்சந்திரன், மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story