அரவக்குறிச்சியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.
அரவக்குறிச்சியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு மூன்று நாட்கள் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்யப்பட்டு நேற்று மாலை அண்ணா நகர் பகுதியில் இருந்து 11 விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ரங்கராஜ் நகர், கேநகர்,பூலாம்வலசு, அரவக்குறிச்சி வழியாக ராஜபுரம் அமராவதி ஆற்றில் விநாயகரை சிலை கரைக்கப்பட்டது இந்து முன்னணி கரூர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேளதாளங்கள் முழங்க பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கய்யா மேற்பார்வையில் அரவக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளர் அப்துல் கபூர் கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story





