மேயர் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? – கோவையை குப்பைக் கிடங்கு ஆக்கக் கூடாது: அ.தி.மு.க கவுன்சிலர்கள் ஆவேசம் !

மேயர் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? – கோவையை குப்பைக் கிடங்கு ஆக்கக் கூடாது: அ.தி.மு.க கவுன்சிலர்கள் ஆவேசம் !
X
கோவை மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் கோவை மாநகரை குப்பை கிடங்கு ஆகாதே என்ற பேனருடன் கலந்து கொண்டதால் பரபரப்பு நிலவியது.
கோவை மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் “கோவை மாநகரை குப்பை கிடங்கு ஆகாதே” என்ற பேனருடன் கலந்து கொண்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர் பேசிய அவர்கள், தி.மு.க ஆட்சியில் கோவை குப்பை மேடாகி வருவதாகவும், வெள்ளலூர் குப்பை கிடங்கில் திருப்பூரிலிருந்து குப்பை கொண்டு வந்து பயோ கேஸ் தயாரிக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு, நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றும் கோரினர். மேலும், மாஸ்டர் பிளான் மக்கள் கருத்து கேட்காமல் நிறைவேற்றப்படுவதாகவும் குற்றம் சாட்டி, “மேயர் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?” என சவால் விடுத்தனர்.
Next Story