விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
X
கூட்டம்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு நடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்து பேசினர். கள்ளக்குறிச்சியில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ஜீவா, வேளாண்மை இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜோதிபாஸ், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், கால்நடை இணை இயக்குநர் விஷ்ணுகாந்தன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story