விநாயகர் சிலைகள் விஜர்சனம்

X
திருக்கோவிலுார், அரகண்டநல்லுார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரகண்டநல்லுார் அல்லித் தாமரை ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருக்கோவிலுார், மணம்பூண்டி, தேவனுார், அரகண்டநல்லுார் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி ராமமூர்த்தி தலைமையில், ஐந்து முனை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை பூஜைகள் செய்யப்பட்டு பகல் 12:30 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது. மதியம் 2:30 மணி அளவில் அரகண்டநல்லுார் அல்லித் தாமரை ஏரியில் ஊர்வலம் நிறைவடைந்து, சிலைகள் பாதுகாப்பாக ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டது. திருக்கோவிலுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் விநாயகர் சிலைகளை ஏரியில் விஜர்சனம் செய்தனர். திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்தீபன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Next Story

