சாமித்தோப்பு வைகுண்ட பதியில் கலிவேட்டை

சாமித்தோப்பு வைகுண்ட பதியில் கலிவேட்டை
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமை பதியில் ஆவணி திருவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் எட்டாம் நாளான நேற்று 29- ம் தேதி வெள்ளிக்கிழமை கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமைப்பதி முன்பிருந்து புறப்பட்ட வெள்ளை குதிரை வாகனம் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து முத்திரி கிணற்றங்கரையை அடைந்தது. அங்கு அய்யா கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர் குதிரை வாகனம் செட்டிவிளை, சாஸ்தான் கோவில்விளை, கோட்டையடி புதூர், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக சுற்றி இரவு 11 மணிக்கு வாகனம் சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைந்தது. இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன பவனி நடக்கிறது.
Next Story