புகார்கள் எதிரொலியாக பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்

X
சேலம் கருப்பூர் அருகே பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத்தலைவராக பணியாற்றியவர் பெரியசாமி. இவர் பணிகாலத்தில் தனக்கு வேண்டிய மாணவர்களுக்கு மட்டும் ஆய்வு அறிக்கையில் கையெழுத்திட்டதாகவும், வேண்டாத மாணவர்களுக்கு கையெழுத்து போடாமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் வகுப்பறையில் சில மாணவர்களை சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து தமிழ்த்துறை தலைவர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர் தமிழ் பேராசிரியராக பணியாற்ற அனுமதிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பெரியசாமி மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர் மீது பல்கலைக்கழக விதிகளின்படி துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள அந்த குழு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், தமிழ்த்துறை பேராசிரியர் பெரியசாமியை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசின் கல்லூரி கல்வி ஆணையாளர் சுந்தரவல்லி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் ஜெயந்தி, சுப்பிரமணி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். மாணவர்களின் புகார்கள் எதிரொலியால், பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

