சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில்

X
இந்திய ஆக்கி வீரர் மேஜர் தயான்சந்தின் பிறந்த நாளான நேற்று நாடு முழுவதும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மறைந்த மேஜர் தயான்சந்த் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், செயின்ட் ஜான்ஸ் பள்ளி முதல்வர் அருள்சுந்தர், சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

