கந்தர்வகோட்டை: வாகனம் மோதி தொழிலாளி பலி!

X
கந்தர்வகோட்டை அருகே உள்ள வளவம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்(41). கந்தர்வகோட்டை நகரில் உள்ள ஓட்டலில் தொழி லாளியாக வேலை பார்த்து வந்தார். வேலைக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் அதிகாலை வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
Next Story

