பைக்குகள் நேருக்கு நேர் மோதல்:பெண் பலி

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்:பெண் பலி
X
விபத்து செய்திகள்
திருமயம்: சிவகங்கை மாவட்டம் பள்ளத்துாரை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (55). இவரது மகன் காசிநாதன்(31). நேற்று முன்தினம் தாய்,மகன் இரு வரும் பைக்கில் புதுக்கோட்டை சென்றுவிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். நெய் வாசல்பட்டி மெயின் ரோட்டில் வந்தபோது, அரிம ளத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த மற்றொரு பைக்குடன் எதிர்பாராதவிதமாக மோதி யது. இதில் பாண்டியம்மாள், காசிநாதன், மற்றொரு பைக்கில் வந்த லட்சுமணன்(24) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், வழியிலேயே பாண்டி யம்மாள் உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அரிமளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண் டுள்ளனர்.
Next Story