ஜமாத் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

பாப்பாரப்பட்டி ஜமாத் சார்பில் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி சுன்னத் ஜமாத்தின் தலைவர் எஸ்.பி.தெளலத்பாஷா, இன்று சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பாப்பாரப்பட்டி சுன்னத் ஜமாத்துக்கு சொந்தமான நிலத்தை மயானமாக இத்தனை ஆண்டுகள் பயன்படுத்தி வருகிறோம். அதை யாரோ விற்று விட்டார்கள் என கூறி ஆக்கிரமிப்பு செய்து விற்பதற்கு சிலர் முயற்சி செய்கிறார்கள். இது சம்பந்தமாக ஆட்சியர் , காவல்துறைக்கு உயர் அதிகாரிகளுக்கும் மனுவாகவும் புகார் ஆகவும் தெரிவித்திருந்தோம் இதுகுறித்து எந்த பதிலும் இல்லாததால், வரும் செப்டம்பர் 05ஆம் தேதி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போகிறோம் என தெரிவித்தார்.
Next Story