வாணியம்பாடியில் நூறாண்டு பழமை வாய்ந்த அரச மரத்தை மர்மநபர்கள் வெட்டியதால் இயற்கையார்வலர்கள் அதிர்ச்சி...

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நூறாண்டு பழமை வாய்ந்த அரச மரத்தை மர்மநபர்கள் வெட்டியதால் இயற்கையார்வலர்கள் அதிர்ச்சி... அருகில் இருந்த நாகலம்மன் மற்றும் விநாயகர் சிலையுடன் இருந்த கோவிலை இடித்து அப்புறப்படுத்தியதாக குற்றச்சாட்டு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் கடந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் ஒன்று இருந்துள்ளது அதன் அடியில் நாகலம்மன் மற்றும் விநாயகர் சிலை வைத்து காலகாலமாக அப்பகுதியில் உள்ளவர்கள் வழிபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு அந்தப் பகுதிக்கு பெரும்பாலும் மக்கள் செல்வதை தவிர்த்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று 100 ஆண்டு பழமை வாய்ந்த அரச மரத்தை மர்மநபர்கள் துண்டு துண்டாக வெட்டி உள்ளனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த நாகலம்மன் சிலை மற்றும் விநாயகர் சிலையை இடித்து அப்புறப்படுத்தி உள்ளனர். இதனால் அதிர்ந்து போன அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டு இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ரயில்வே துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் இந்த மரத்தை வெட்டிய நபர் யார்? எதற்காக இந்த மரத்தை வெட்டினார்? என்பது குறித்து இதுவரை அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்ச்சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story

