வாணியம்பாடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊராலமாக சென்று ஏரியில் கரைக்கப்பட்டது

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊராலமாக சென்று ஏரியில் கரைக்கப்பட்டது நாடு முழுவதும் கடந்த 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில் திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் 27 ஆம் தேதி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், இன்று (29) பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் கரைப்பதற்காக, விழாக்குழுவினர் மேளதாளங்கள் முழங்க வாணியம்பாடியில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக பலத்த போலீஸ் காப்புடன் கொண்டு சென்று பள்ளிப்பட்டு ஏரிக்கு கொண்டு செல்ல ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது, இந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் விழா குழுவினர்கள் பலர் பங்கேற்ற நிலையில் ஊர்வலத்திற்கு பாதுகாப்பிற்காக சுமார் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story

