கரூர்-ஈரோடு ரயில் வழித்தடத்தில் பாலம் பராமரிப்பு பணிகள்- ரயில் சேவையில் மாற்றம்.
கரூர்-ஈரோடு ரயில் வழித்தடத்தில் பாலம் பராமரிப்பு பணிகள்- ரயில் சேவையில் மாற்றம். திருச்சிராப்பள்ளி சந்திப்பு – ஈரோடு பயணிகள் ரயில், திருச்சிராப்பள்ளி சந்திப்பில்– காலை 07.20 மணிக்கு புறப்படும். இந்த ரயில், செப்டம்பர் 02, 05, 08 & 11, 2025 ஆகிய 4 நாட்கள் கரூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். இந்த ரயில், திருச்சி–கரூர்-க்கு மட்டுமே இயக்கப்படும். 2. ஈரோடு சந்திப்பு – செங்கோட்டை எக்ஸ்பிரஸ், செப்டம்பர் 02, 05, 08 & 11, 2025 ஆகிய 4 நாட்கள் பிற்பகல் 15.05 மணிக்கு கரூர் – ஈரோடு வரை இயக்கப்படும். இது கரூர் சந்திப்பிலிருந்து புறப்பட்டு மேற்கூறிய தேதிகளில் செங்கோட்டை வரை செல்லும். செங்கோட்டையிலிருந்து காலை 05.10 மணிக்கு புறப்படும் ரயில் எண்.16846 செங்கோட்டை - ஈரோடு சந்திப்பு எக்ஸ்பிரஸ், 02, 05, 08 & 11 செப்டம்பர், 2025 ஆகிய 4 நாட்கள் கரூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். இந்த ரயில் செங்கோட்டையிலிருந்து கரூர் சந்திப்புக்கு மட்டுமே இயக்கப்படும். மேற்கூறிய தேதிகளில் கரூர் சந்திப்பு முதல் ஈரோடு சந்திப்பு வரை இயக்கப்படாது என சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story




