அமலிநகர் அன்னை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
அமலிநகர் அன்னை திருத்தல 85 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்செந்தூர் அருகே கடற்கரை அருகே அமைந்துள்ள சிறப்பு பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் அமலிநகர் அன்னை திருத்தலமும் ஒன்றாகும். இந்த அமலிநகரில் அன்னை ஆலயத்தில் வருடம் தோறும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான 85 வது திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அதைத் தொடர்ந்து முக்கிய வீதிகள் மற்றும் கோவிலை சுற்றி கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்தின் முன்பு மந்திரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடற்கரையோரம் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் ஜீவாநகர் பங்குதந்தை இருதயராஜ் கொடியை ஏற்றினார். அதை தொடர்ந்து அன்னைக்கு மணிமகுடம் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெருவிழா வருகிற 8 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். விழா ஏற்பாடுகளை அமலிநகர் கிராம மக்கள் மற்றும் அமலிநகர் பங்குதந்தை வில்லியம் சந்தானம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Next Story



