கோவை: கோவில் வருமானம் - வெளிப்படையற்றது என அண்ணாமலை விமர்சனம்
கோவை துடியலூரில் விநாயகர் சதுர்த்தி பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழகத்தில் 46 ஆயிரம் கோவில்கள் இருந்தும் அறநிலையத் துறைக்கு ஆண்டு வருமானம் வெறும் 300 கோடி ரூபாய் மட்டுமே என விமர்சித்தார். கோவில் நகைகள் உருக்கப்பட்டு வங்கியில் வைப்பு செய்யப்பட்டதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். விநாயகர் சதுர்த்தி மக்கள் ஒன்றிணைவதற்கான விழாவாகும் என்றும், சிலை விஸர்ஜனத்திற்குப் பிறகு இளைஞர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஏரிகளை சுத்தம் செய்ய முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, சொத்துக்கள் இழப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து அரசை கடுமையாக விமர்சித்த அவர், 2026 தேர்தலில் வாக்கை மரியாதையுடன் பயன்படுத்துமாறு மக்களிடம் வலியுறுத்தினார்.
Next Story




