கோவையில் தங்க நகை கடை உரிமையாளர்களுடன் வானதி சீனிவாசன் கலந்துரையாடல் !

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ மற்றும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தலைமையில் தங்க நகை கடை உரிமையாளர்களுடன் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ மற்றும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தலைமையில் தங்க நகை கடை உரிமையாளர்களுடன் நேற்று மாலை கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. அமெரிக்கா வைரம் மற்றும் நகைத் துறைக்கு விதித்துள்ள வரிகள், அதன் தாக்கங்கள் குறித்து பேசும் போது, “இந்த வரி விதிப்பு வெறும் பொருளாதார விஷயம் அல்ல; பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளன. இந்தியா வேகமாக வளர்ந்து, உலக பொருளாதாரத்தில் முன்னணி இடத்தைப் பெறுவதால் இதுபோன்ற அழுத்தங்கள் வருகின்றன. ஆனால் எந்த சூழலிலும் இந்திய விவசாயத்தையும், நாட்டின் நலனையும் மோடி அரசு விட்டுக் கொடுக்காது,” என வானதி சீனிவாசன் கூறினார். மேலும், இந்தியா உலக நாடுகளுடன் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும், தங்கம் உள்ளிட்ட துறைகளில் ஏற்றுமதிக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வணிகர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் நிறைவடைந்து, ஏற்றுமதிக்கான வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும், ஜிஎஸ்டி ரீபார்ம், வங்கிகள் வழங்கும் நிதி ஆதரவு, அரசாங்கத்தின் கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினார். “இந்தியா வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. சிறிய சவால்கள் இருந்தாலும், மத்திய அரசு வியாபாரிகளுக்கு உறுதுணையாக இருக்கும். பிரதமர் மோடிக்கு மக்கள் நம்பிக்கை, ஆதரவு தேவை. நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
Next Story