டிப்பர் லாரி மோதி மதுராந்தகம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் நான்கு பேர் காயம்

டிப்பர் லாரி மோதி மதுராந்தகம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் நான்கு பேர் காயம்
X
டிப்பர் லாரி மோதி மதுராந்தகம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் நான்கு பேர் காயம்
தூய்மை பணி செய்து கொண்டிருந்தபோது டிப்பர் லாரி மோதி மதுராந்தகம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் நான்கு பேர் காயம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி சிகிச்சைக்காக பணம் வழங்கிய திமுக நகர மன்ற தலைவர்! செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் சீனிவாசன், சுகுணா, அமுதா, சரஸ்வதி ஆகிய நான்கு பேரும் மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட சூனாம்பேடு சாலையில் தூய்மை பணி செய்யும் போது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளாகியது. அப்பொழுது காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதில் சீனிவாசன், அமுதா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழிகுமார், திமுக நகர செயலாளர் குமார் ஆகியோர் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நான்கு நபர்களுக்கும் மருத்துவ செலவுக்காக தல 5 ஆயிரம் பணம் மற்றும் பழங்களை வழங்கினர். இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story